காட்சிகள், ஒரு சில வசனங்கள் நீக்கப்பட்டும், மியூட் செய்யப்பட்டும் திரையரங்குகளில் ஒளிரும் சர்கார்!

Home > தமிழ் news
By |

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் சர்ச்சைகளுக்கு நடுவே திரையரங்குகளில் வெற்றிகரமாய் ஓடிக்கொண்டிருக்க, இன்னொரு புறம் சர்கார் படத்தில் வரும் சர்ச்சைக்குரிய காட்சிகளையும் வசனங்களையும் நீக்குமாறு தமிழக அரசு மற்றும் அரசியலாளர்கள் தங்கள் போராட்டங்கள் மற்றும் பேட்டிகள் வாயிலாகவும், வழக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. 


இந்த அழுத்தம் காரணமாக இன்று காலை 10.30 மணிக்கு சர்கார் திரைப்படத்தின் சில காட்சிகள் எடிட் செய்யப்படும் பணிகள் தொடங்குகின்றன. இதனை அடுத்து இன்று மதியம் மற்றும் மாலைக் காட்சிகள் தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், அடுத்து வரும் திரையரங்க காட்சிகளில் சர்கார் திரைப்படத்தின் சில முக்கிய காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியாவதாகவும், வழக்கம் போல் எல்லா திரையரங்குகளில் சர்கார் திரைப்படம் தடையின்றி ஓடும் எனவும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர்கள் திருப்பூர் சுப்ரமணியம் மற்றும் அபிராமி ராமநாதன் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் இலவச மிக்ஸி எரிக்கும் 5 நொடி காட்சி நீக்கப்பட்டும், கோமளவல்லி என்னும் வார்த்தையில் கோமள என்கிற சொல், பொதுப்பணித்துறை என்கிற சொல், 56 வருஷமாக என்கிற சொல் முதலானவை மியூட் செய்யப்பட்டு பிற்பகல் 2.30 மணி காட்சியில் இருந்து சர்கார் தங்கு தடையின்றி  திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

SARKAR, VIJAY, ARMURUGADOSS, SARKARCONTROVERSY, THALAPATHY, SUNPICTURES

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS