'அவரு விளையாடுவாரு,ஆனா விளையாடமாட்டாரு'...குழப்பத்தில் இந்திய அணி!

Home > தமிழ் news
By |

இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிந்திர ஜடேஜாவிளையாட தயாராக இருப்பதாக பிசிசிஐ தெரிவித்த நிலையில்,அவர் முழுமையாக தயாராகவில்லை என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருப்பது கடும் குழப்பத்தையும்,சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

ஆஸ்திரேலியவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி,தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி அபாரமான வெற்றியினை பெற்றது.இதற்கு பழிவாங்கும் விதமாக பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில்  ஆஸ்திரேலிய அணி அசத்தலான வெற்றியினை பெற்றது.

 

இந்நிலையில் இரு அணிகளும் பங்கேற்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியானது வரும் 26ம் தேதி மெல்போர்னில் துவங்கிறது.இதனிடையே இந்திய வீரர்கள் காயமடைந்திருப்பது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.சுழற்பந்துவீச்சாளர் ரவிந்திர ஜடேஜா விளையாடுவதற்கு தகுதியாக இருப்பதாக பிசிசிஐ தெரிவித்திருந்த நிலையில் அவர் முழுமையாக தயாராகவில்லை என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே போல அஷ்வினின் நிலைமையும் 48 மணி நேரத்து பின் தான் தெரிய வரும் என சாஸ்திரி தெரிவித்தார்.

 

பயிற்சியாளருக்கும்,பிசிசிஐக்கும் புரிதல் இல்லையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.இந்நிலையில் ஹர்திக் பாண்டியா, மாயங்க் அகர்வால் ஆகியோர் அணியில் உள்ள போதும் அவர்கள் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து ரவி சாஸ்திரி எதுவும் தெரிவிக்காமல் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார்.

RAVINDRA JADEJA, BCCI, CRICKET, SHASTRI, INDIA VS AUSTRALIA

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS