சென்னை வளசரவாக்கத்தில் கழிவு நீர்க் கால்வாயில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்றை சுதந்திர தினமான நேற்று அப்பகுதியைச் சேர்ந்த கீதா என்கிற பெண்மணி மீட்டெடுத்த நிகழ்வு அனைவரையும் உலுக்கியது. பிறந்த சில நாட்கள் கூட கடந்திடாத நிலையில், ஒரு பச்சிளம் சிசுவை யாரோ கழிவு நீர்க் கால்வாயின் வீசிவிட்டு சென்றதை அடுத்து, அந்த குழந்தையை மீட்டெடுத்து அருகில் இருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று கீதா மீட்டுள்ளார்.
மேலும் சுதந்திர தினத்தன்று கிடைத்த அந்த குழந்தைக்கு ‘சுதந்திரம்’ என பெயருமிட்டார். சமூக வலைதளங்களில் பரவிய அந்த வீடியோவைப் பார்த்துவிட்டு, கீதாவின் நன்மதிப்பான செயலை சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கீதாவை நேரில் அழைத்துப் பாராட்டினார்.
இந்நிலையில் அந்த குழந்தை அனுமதிக்கப்பட்ட எக்மோர் மருத்துவமனையை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று நேரில் சந்தித்தார். அந்த பகுதி போலீசாரும் விரைந்து சென்றனர். அங்கு பத்திரிகையாளர்களிடம் அவர்கள் கூறிய தகவல்களின்படி, அந்த குழந்தையை பலரும் தத்தெடுக்க முன்வந்துள்ளதாகவும் தற்போது அந்த குழந்தை தமிழ்நாடு அரசின் உயிர்காக்கும் பெட்டகக் குழுவினரின் கண்காணிப்பில் உள்ளது. மேலும் அந்தக் குழந்தையைத் தத்தெடுக்க, அக்குழந்தையைக் காப்பாற்றிய கீதாவும் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Rain forecast for Chennai
- Chennai: Accused beaten and arrested. About 400 parents throng the school against harassment
- Chennai - Four dead after falling from train
- How did the police help a pregnant lady to get out of a broken down train?
- Chennai: Man burns elderly father to death over property dispute
- Chennai: 99-year-old retired principal sexually abuses minor girl
- 'ஷூ அணிந்து வேலைக்கு செல்ல வேண்டும்'..சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய கமிஷனர்!
- Chennai: Burglar targets milk packets from local store
- Shocking - Chennai bus driver reads paper while driving, caught on camera
- Chennai bank refuses to return gold to customer for owing a balance of Re 1