செல்ஃபி மோகம் எப்போது தொடங்கியது என்று தெரியவில்லை. பிறரிடம் மொபைலைக் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொள்வது நமக்காக என்பதும், நமக்கு நாமே ஏதேனும் ஒரு இடத்துடன், ஒரு நபருடன், பொருளுடன் எடுத்துக்கொள்ளும் செல்ஃபி பிறருக்காக என்பதும் குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் செல்ஃபி எடுக்க முயன்றவர் அணையில் விழுந்து பலியாக, அவரைக் காப்பாற்ற முயன்றவர் பலி ஆகியுள்ள சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் அருகே, கெலவரப்பள்ளி அணைக்கு வட மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் சென்றுள்ளனர். அவர்கள் செல்ஃபி எடுத்துக்கொள்ளும்போது தவறிப்போய் விழுந்ததில் நீரில் மூழ்கி இரண்டு பேர் பலி ஆகியுள்ளனர். அதில் ஒருவர் தவறி விழுந்த வடமாநிலத்தவரை காப்பாற்ற முயன்ற தமிழ் மாணவர் ஆவார்.
வடமாநிலத்தை சேர்ந்த நபர்கள் 3 பேர் செல்ஃபி எடுக்கும்போது, அவர்கள் சற்றும் எதிர்பாராத விதமாக அணையில் ஒருவர் தவறி விழுந்ததும், அருகில் இருந்த இரண்டு வட மாநிலத்தவர்களும் பயத்தில் தப்பி ஓடியுள்ளனர்.
ஆனால் தவறி விழுந்த வடமாநில நபரான தபேந்திரனை காப்பாற்றும் முனைப்பில் அருகில் இருந்த கல்லூரி மாணவர் கேசவன் முயற்சிக்க, அவரும் பரிதாபகரமாக அணையில் தவறி விழுந்து பலியாகியுள்ளார். ஆபத்துக்கு காப்பாற்ற போன கேசவன் பலியாகியுள்ள சம்பவமும், செல்ஃபி மோகத்தினால் தவறி விழுந்து உயிரிழந்த தபேந்திரனின் மரணமும், நண்பர்கள் விழும்போது தப்பி ஓடிய வட மாநில நண்பர்களின் செயலும் பலரை பதற வைத்துள்ளது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- பட்டா கத்தியுடன் பயணம்.. பதறவைத்த சென்னை மாணவர்கள்!
- அண்ணா பல்கலை., பகுதிநேர முதுகலை படிப்புகள் நடப்பாண்டு முதல் ரத்து!
- Batman Pulled Over By Cops. What Happened Next Will Put A Smile On Your Face
- இன்ஜினியரிங் படிப்புக்கு என்னதான் ஆச்சு.. 1 லட்சத்துக்கும் மேல் காலி இருக்கைகள்!
- விராட் பிக்சர் ப்ளீஸ்...சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய கோலி !
- Junk food to be banned in colleges and universities?
- கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஜங்க் ஃபுட்டிற்கு தடை !
- காப்பாற்ற வந்த ஹெலிகாப்டருடன் செல்ஃபி எடுத்த சேட்டன் ...கடுப்பான விமானி !
- கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த ’தடா’.. உயர்கல்வித்துறை அதிரடி!
- தமிழகத்தில் நாளை பள்ளி-கல்லூரி,அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை!