பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்த மாணவி..வேறு கல்லூரிக்கு செல்லாததால் நீக்கம்!

Home > தமிழ் news
By |

திருவண்ணாமலையின் வாணாபுரம் அருகே வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரியில், விடுதியில் தங்கி 2-ம் ஆண்டு  படித்துக்கொண்டிருந்த மாணவிக்கு அதே வேளாண் கல்லூரி உதவிப் பேராசிரியர் தங்கபாண்டியன், விடுதி காப்பாளர்களாக இருந்த உதவிப் பேராசிரியைகள் இரண்டு பேரின் உதவியுடன் கடந்த 7 மாதங்களாக பாலியல் தொல்லை செய்து வந்ததாக சுமார் இரண்டு வாரங்களுக்கு முன் புகார் அளித்தார்.


இதனை  நேற்று முன்தினம் விசாரித்த மாவட்ட நீதிபதி மகிழேந்தியின் ஆணையின் பேரிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்ரவர்த்தி உத்தரவின்பேரிலும் அப்பகுதியின் கூடுதல் எஸ்பி வனிதா தலைமையிலான குழு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் ஒழுங்குமுறை ஆணையக் குழு உதவியுடன்  நேற்றைய தினம் புகார் அளித்த மாணவி, கல்லூரி முதல்வர், குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் , விடுதி காப்பாளர்கள் என அனைவரையும் விசாரித்தனர்.


அதன் பின்னர் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான உதவிப் பேராசிரியர் தங்கபாண்டியனை தற்காலிகமாக பணி நீக்கம் செய்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராமசாமி ஆணையிட்டார்.  எனினும் பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி வேளாண் பல்கலைக்கழக உத்தரவின்படி, திருச்சியில் பரிந்துரைக்கப்பட்ட கல்லூரியில் சேராததால் மாணவியை, கல்லூரியில் இருந்து நீக்கி, நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

SEXUALABUSE, COLLEGESTUDENT, GIRL, WOMEN, AGRICULTURESTUDENT

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS