சேலம் - பெங்களூரு தேசிய நெருஞ்சாலையில் மாமங்கம் அருகே நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், பயணிகள் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் பலத்த படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கவலைக்கிடமான நிலையில் சிலர் இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை கூடும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 

நேற்று நள்ளிரவும் சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி சென்றுகொண்டிருந்த் தனியார் பேருந்து ஓட்டுநர் அரைத்  தூக்கத்தில் பேருந்து ஓட்டிக்கொண்டு சென்றபோது, பூக்களை ஏற்றிக்கொண்டு சாலையோரம் நின்றுகொண்டிருந்த மினி வேனை கவனிக்கவில்லை. கடைசி நேரத்தில் அதை கவனித்த ஓட்டுநர் பேருந்தை தட்டென திருப்ப முயல, எதிரே பெங்களூருவில் இருந்து பாலக்காடு சென்ற தனியார் பேருந்தின் மீதுச் சென்று மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. 


இதன் காரணமாக சம்பவ இடத்திலேயே விபத்தில் நசுங்கி மலையாளிகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அறிந்து அங்கு விரைந்த சேலம் கலெக்டர் ரோகிணி விபத்து நிகழ்ந்த இடத்தை ஆய்வு செய்துவிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்திவிட்டு செய்தியாளர்களிடம் நடந்த விபத்தை விளக்கினார். விபத்துக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.  

BY SIVA SANKAR | SEP 1, 2018 10:01 AM #ACCIDENT #SELAMBUSACCIDENT #SELAMCOLLECTORROHINI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS