பேட்டி அளித்தபோது கண்ணீர் விட்டு அழுத கலெக்டர் ரோகிணி.. காரணம் இதுதான்!
Home > தமிழ் newsசேலத்தில் கலெக்டர் ரோகிணி, பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிக் கொண்டிருந்தவர் திடீரென உணர்ச்சிவசப்பட்டு, நா தழுதழுத்து கண்ணீர் மல்க அழத் தொடங்கிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நம்மூருக்கு கிடைத்துள்ள கலெக்டர்கள் எல்லாம் மிகுந்த சமூக அக்கறையுடன் இருப்பதையும், பொதுமக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருவதையும் காண முடிகிறது. அவ்வகையில், மிகவும் நன்றாக படிக்கக் கூடிய ஒரு பெண் மாணவி, பொருளாதார ரீதியாக பின் தங்கியிருப்பதாலும், ஆதரவற்ற நிலையில் இருப்பதாலும் அவர் படிக்க விரும்பும் படிப்புக்கான கல்வித் தொகையை கட்டுவதில் மிகவும் சிரமப்பட்டுள்ளார். இரண்டு வருடம் நன்றாக படித்த அந்த மாணவி, மூன்றாவது வருடத்தில் கல்வித்தொகையை கட்ட முடியாததால், மேற்கொண்டு கல்வி பயில் முடியாமல், படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்.
இந்த நிலையில், அந்த மாணவியின் அம்மாவும், நண்பர்களும் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணியிடம் உதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்த கலெக்டர் ரோகிணி, உடனடியாக இந்தியன் வங்கி மூலம் கடன் உதவியை 10 நிமிடத்தில் ஏற்பாடு செய்துள்ளார்.
அதன் பிறகு பேசிய ரோகிணி, ‘இதை தான் வெறும் கலெக்டராகச் செய்யவில்லை என்றும், தன்னை போல இன்னும் பல பெண்கள் சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் மேலெழுந்து வந்து நல்ல வாழ்க்கையை வாழவேண்டும் என்றால் அவர்களுக்கு கல்விதான் அத்தியாவசியம் என்றும் கூறும்போது அழத் தொடங்கிவிட்டார். மேலும் அழுதுகொண்டே பேசியவர், ’நன்றாக படிக்கக் கூடிய பெண்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தக்கூடிய சூழல் வந்தால், அவர்களுக்கு உதவ 24 மணி நேரமும் ’நாங்கள் இருக்கிறோம்’ என்றும் கூறியுள்ளார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- தமிழ் மொழி மீதான காதலால் அமெரிக்க பெண் எடுத்த முக்கிய முடிவு.. வைரலாகும் புகைப்படங்கள்!
- ஏமாற்றிய மகன்கள்.. கலங்கிய பெற்றோர்கள்.. கலெக்டர் அதிரடி!
- 'என்கூட பேச மாட்டியா மெர்சி?’: டீக்கடையில் பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர்..வீடியோ!
- ‘ஸ்டெர்லைட் ஆலையை மூடியது ஏற்றுக்கொள்ள முடியாதது’.. டெல்லி பசுமை தீர்ப்பாயம் அதிரடி!
- ’ப்ளீஸ்! இந்த நாட்டு நலனுக்காக, என்ஜினியரிங்க விட்டுடுப்பா’; மாணவனிடம் கெஞ்சிய கோர்ட்!
- காதலருடன் சேர்ந்து, கணவரைக் கொன்ற மனைவியின் ‘மாஸ்டர் ப்ளான்’ அம்பலம்!
- Heart-Warming! Police Station Turns Into Classroom For Slum Kids
- MHRD to change homework policy for students; Here is what's going to be new
- ‘புடி..புடி அவன’.. மேலதிகாரியின் பேச்சைக் கேட்டு உயிரை பணையம் வைக்கும் டிராஃபிக் காவலருக்கு நடந்த விபரீதம்!
- கஜா புயல்: சாப்பிட கூட நேரமின்றி இந்த ஊழியர் செய்யும் வேலைய பாத்தா சல்யூட் அடிப்பீங்க!