கோயமுத்தூர் என்றாலே மரியாதை கொடுத்து பேசும் மாநகரம் என்று எல்லோருக்கும் தெரியும். அதிலும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி  மனைவிக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆழியார் அருகே  உள்ள அறிவுத்திருக்கோவிலில் நிகழ்ந்த மனைவி நல வேட்பு விழா கொண்டாடப்பட்டது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மனைவி என்பவர் வீடு எனப்படும் மனைக்கு ஆதாரமாக விளங்கியதால் அப்பெயர் வந்தது. பிற்காலத்தில் பெண் சுதந்திர கருத்துக்கள் பரவத் தொடங்கிய பின்பே பலரும் தத்தம் மனைவியை சுயமரியாதையுடன் நடத்துவது பற்றிய புரிதலுக்கு  வந்தனர். இன்னும் பலர் மனைவியை காலனி ஆதிக்கத்திம் கீழேயே வைத்துள்ளனர்.

 

இந்நிலையில், மனைவியின் மாண்பைப் போற்றும் வகையில், ஆழியார் அறிவுத்திருக்கோவிலில் நிகழ்ந்த மனைவி நல வேட்பு விழாவில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டலங்களில் இருந்து  இளம் மற்றும் மூத்த தம்பதியினர் பலர் பங்கு பெற்றனர்.  சென்னை அணுமின் நிலைய இயக்குனர் சத்திய நாராயணா,  கோவை மாநகர காவல்துறை ஆணையர் கே.பெரியய்யா ஆகியோர் பங்கேற்ற இவ்விழாவில் தம்பதியினர் ஒருவரை ஒருவர் பார்த்தபடி முகத்திற்கு நேரே அமர்ந்து, குடும்ப வாழ்வில் கோபதாபங்களை மன்னித்தும், மறந்தும் இணக்கமாக  இருக்க உறுதிமொழி ஏற்றும் பூங்கொத்துக்களைக் கொடுத்து  வாழ்த்துக்களை பரஸ்பரம் பரிமாறியும் கொண்டாடினர்.

 

நிகழ்ச்சியில் சிறப்பு சொற்பொழிவாளராக பேசிய பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், மனைவியின் சிறப்பியல்பையும் தியாகங்களையும் அவரின் மாண்பை எவ்வாறு ஒரு ஆண் புரிந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி பேசினார்.

BY SIVA SANKAR | AUG 31, 2018 11:12 AM #COIMBATORE #RESPECTWIFE #RESPECTWOMEN #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS