சாக்கடை சுத்தம் செய்ய மனிதர்களை அமர்த்துவது டெல்லியில் சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் தடையை மீறி  பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் போது மூச்சுத் திணறல் காரணமாக, 37 வயது தொழிலாளி அனில் என்பவர் உயிரிழந்த சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

மேற்கு டெல்லியில் டாப்ரி என்ற பகுதியில், 20 அடி ஆழ பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய, அந்தப் பகுதியில் வசித்து வரும் சத்பிர் காலா என்பவர், ஒரு கான்ட்ராக்டர் மூலமாக அனில் என்பவரை கூலி கொடுத்து வரவழைத்துள்ளார்.20 அடி ஆழமுள்ள சாக்கடையில் கயிறு மூலம் இறங்கியுள்ளார்.ஆனால் அவர் இறங்குவதற்கு பயன்படுத்திய கயிறு உறுதி இல்லாமல் இருந்ததால் பாதியிலேயே அறுந்து விழுந்தது.

 

அனில்  சுத்தம் செய்வதற்கு இறங்கிய சாக்கடையின் வாயில் சிறியதாக இருந்ததால் மீட்புக்குழுவினரால் அவரை உயிருடன் காப்பாற்ற முடியவில்லை.90 நிமிடங்கள் நீடித்த மீட்பு பணி இறுதியில் தோல்வியில் முடிந்தது.இந்தப் பணி தொடங்கும் முன்னர், அந்த கயிறு பாதுகாப்பானதல்ல என்று கான்ட்ராக்டர் சத்பீரிடம் எச்சரித்துள்ளார். ஆனால் அவர் அதை பொருட்படுத்தவில்லை. சுத்தம் செய்யும் பணிக்கு வேறெந்த பாதுகாப்பு உபகரணங்களும் கொடுக்கப்படவில்லை என போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

 

மரணமடைந்த அனில் அவருடைய மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன்  டாப்ரி பகுதியில் ஒரு சிறிய அறையில் வாழ்ந்து வருகின்றனர். அனிலின் நான்கு மாத மகன், ஆறு நாட்களுக்கு முன் நிமோனியா நோய்க்கு பலியானார். தனது கணவர் கண்ணியமான ஒரு பணி செய்ய ஆசைப்பட்டார்.ஆனால் அவருக்கு சரியான வேலை எதுவும் அமையவில்லை.கணவருக்கு  இறுதிச் சடங்குக்குக் கூட எங்களிடம் பணம் இல்லை என வேதனையுடன் தெரிவித்தார்.

 

அனிலின் வருமானத்தையே நம்பியே அவரின் குடும்பம் இருந்துள்ளது.இந்நிலையில் அனிலின் குடும்பத்திற்கு  பல பிரபலங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் எனப் பலரும் நிதி திரட்டுவதற்கான லிங்கை தங்கள் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். அனிலின் உடலுக்கு அருகில் அவரது மகன் நின்று அழும் புகைப்படம் காண்போரின் மனதை உருக்குவதாக அமைந்துள்ளது.

BY JENO | SEP 17, 2018 5:25 PM #CLEANER DIES #DELHI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS