12 சிக்ஸர், உலக சாதனை.. முதல் போட்டியிலேயே அதிரடி காட்டிய கிறிஸ் கெய்ல்!

Home > News Shots > தமிழ் news
By |

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சிக்ஸர், சதம் என  வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் அதிரடி காட்டியுள்ளார்.

இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி பர்படாஸ் தீவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. 50 ஓவர்களின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் எடுத்தது.

இதில் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் 129 பந்துகளில் 135 ரன்கள் எடுத்து அசத்தினார். இது சர்வதேச ஒருநாள் போட்டியில் இவர் அடித்த 24 வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில், கிறிஸ் கெய்ல் 12 சிக்ஸர்களும் 3 பவுண்ட்ரிகளும் அடித்து விளாசினார்.

இதன்மூலம் மூன்று விதமான கிரிக்கெட் போட்டியிலும் அதிக சிக்ஸர் அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து உலக சாதனைப் படைத்தார். மேலும் 488 சிக்ஸர் அடித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாஹித் அப்ரிடியின்(476 சிக்ஸர்) சாதனையை முறியடித்துள்ளார். இதில் கிறிஸ் கெய்ல் அடித்த 8 சிக்ஸர்கள் மைதானத்தைத் தாண்டி விழுந்துள்ளது.

ஆனாலும் இங்கிலாந்து அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 48.4 ஓவர்களில் 364 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதில், இங்கிலாந்து வீரர்களான ஜேசன் ராய்(123) மற்றும் ஜோ ரூட்(102) ஆகிய இருவரும் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு கைகொடுத்தனர்.

CHRISGAYLE, WIVENG, ODI

OTHER NEWS SHOTS

RELATED NEWS STORIES