மார்வெல் பட ரசிகர்களுக்கு அதிர்ச்சி... கிறிஸ் ஏவன்ஸின் நெகிழ்ச்சி பதிவு !

Home > தமிழ் news
By |

மார்வெல் திரைப்படங்களில் எல்லாம் கேப்டன் அமெரிக்காவாக தனது சிறப்பான நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களை உலகம் முழுவதும் சம்பாதித்தவர் கிறிஸ் எவன்ஸ்.தற்போது அவர் பதிவிட்டுள்ள ட்விட் அவரது ரசிகர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

கடந்த 8 வருடங்களாக மார்வெல் பட வரிசையில் கேப்டன் அமெரிக்காவாக வலம் வந்த அவர் அந்த கதாபாத்திரத்திற்கு ஓய்வு கொடுக்க போவதாக அறிவித்து உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

 

அதில் "தற்போது அவெஞ்சர்ஸ் 4-ரை நான் முடித்து விட்டேன். கேப்டன் அமெரிக்காவாக கடந்த 8 வருடங்கள் இந்த பெருமையை  அளித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.இதற்காக கேமராவிற்கு முன்னாலும் பின்னாலும் உழைத்தவர்கள்,திரையில் என்னை கண்ட அனைத்து ரசிகர்கள் என நீங்கள் எனக்கு அளித்த நினைவுகள் ஏராளம்.அதற்காக எனது அன்பான நன்றியை தெரிவித்து கொள்கிறென்" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

 

உலக முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் தங்களின் வருத்தத்தை ட்விட்டர் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

CHRIS EVANS, CAPTAIN AMERICA, MARVEL MOVIES, AVENGER 4

OTHER NEWS SHOTS