"திமிங்கல தொட்டிக்குள் விழுந்த பெண்": அதிர்ச்சியூட்டும் வீடியோ !

Home > தமிழ் news
By |

சீனாவின் ஜியாசிங் பகுதியில் உள்ள வியுயூ பிளாசாவில் பெண் ஒருவர் தவறுதலாக, திமிங்கலங்களுக்கு உணவு அளிக்கும் தொட்டிக்குள் விழும் அதிர்ச்சிகரமான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

வியுயூ வணிக வளாகத்தில் பணிபுரியும் பெண் மீட்டிங்கிற்கு செல்வதற்காக வேகமாக சென்ற போது, திமிங்கல தொட்டி திறந்திருந்ததை கவனிக்காமல் உள்ளே விழுகிறார். இரண்டு நிமிடத்திற்கு தொட்டிக்குள் நீந்திய அப்பெண்ணை அங்குள்ள பாதுகாப்பு ஊழியர்கள் பத்திரமாக மீட்டர்கள்.நல்ல வேளையாக, அப்பெண் எந்தவித காயமுமின்றி உயிர்தப்பினார்.

 

இதுகுறித்து வணிக வளாகத்தின் செய்தி தொடர்பாளர், செய்தியாளர்களுக்கு  அளித்த பேட்டியில். "திமிங்கலங்களுக்கு உணவு கொடுக்கும் போது அவ்வழியாக மற்றவர்கள் செல்ல அனுமதி இல்லை. மீட்டிங்கிற்கு செல்ல நேரமாகியதால் அப்பெண் அந்த வழியை பயன்படுத்தி சென்ற போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும், எந்தவித காயமுமின்றி அவர் உடனே மீட்கப்பட்டார்".இருப்பினும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

CHINESE WOMAN, SHARK TANK, TERRIFYING VIDEO

OTHER NEWS SHOTS