தன்னால் போக முடியாததால், விமானத்தையே உருவாக்கிய விவசாயி!

Home > தமிழ் news
By |

பூமியில் உணவு பொருட்களை விளைவிக்கும் விவசாயி முழுமையாக நம்பியிருப்பதே வானத்தைத்தான். உலகமே விவசாயி விளைவிக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு வானத்தில் பறக்கும்போது அந்த விவசாயிக்கு வானத்தில் பறக்க ஆசை வராதா என்ன? சீனாவில் பூண்டு மற்றும் வெங்காயம் முழுதாய் விளைவிக்கும் விவசாயி ஒருவருக்கு இப்படி ஒரு ஆசை  வந்ததும் அவர் செய்த காரியம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

சீனாவின் வடக்கு மாகாணத்தில் கோதுமை பண்ணை விவசாய நிலத்துக்கு நடுவே ஏர்பஸ் 320 என்கிற விமான மாடலை 60 டன் ஸ்டீல்களைக் கொண்டு நான்கைந்து ஏரோநாட்டிக்கல் பொறியியல் நிபுணர்களை வைத்து தயாரித்துள்ளார். இதற்கென அவர் செலவிட்ட தொகையோ 2.6 மில்லியன். மிடில் கிளாஸ் கூட முழுதாய் படித்திராத சூயூ தான் இத்தகைய செயலைச் செய்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். 

 

அவர் தற்போது வடிவமைத்துள்ள, 36 முதல் வகுப்பு பயணிகளுக்கான சீட்டும், மொத்தம் 156 சீட்டுகளும் கொண்ட  இந்த விமானத்தை,  அனைத்து சாரரும் வந்துபோகும் உணவகமாக மாற்றவிருக்கிறார்.  தன்னால் உணவு பொருட்களை தொடர்ச்சியாக பயிரிட்டு வரும் சூயூ தன்னால் தற்போதைக்கு ஃபிளைட்டில் போக முடியாது போல் இருக்கிறது என்று நினைத்தவர், பின்னாளில் இப்படி ஒரு யோசனைக்கு பிறகு உருவாக்கிய இந்த புரொட்டொடைப் மாடல் விமானத்தை வைத்து விமானிகள் இயக்கிச் செல்லும் ஒரிஜினல் விமானத்தை டிசைன் செய்து அதில் பயணிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். ,

CHINA, AIRPLANE, FLIGHT, FARMER, REPLICA, AIRBUS320

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS