சரும பாதுகாப்புக்காக மாஸ்க் அணிந்து ’கேப்’ ஓட்டிய டிரைவருக்கு தண்டனை!

Home > தமிழ் news
By |

சீனாவின் லின்ஹாயில் இருக்கும் கேப் டிரைவர் சென் யுகின் வெள்ளிக்கிழமை மாலைக்கு பிறகான லேட் நைட் ஷிஃப்டில் பணிபுரிய எண்ணியிருக்கிறார்.  அந்த நேரத்தில் தன் முகத்துக்கு ஸ்கின் கேர் எனப்படும் சருமப் பாதுகாப்பு ஷீட் ஒன்றை முகத்தில் அப்ளை செய்தபடி வண்டி ஓட்டவும், இதனை ஒரு பெண்மணி புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார். 

 

இணையத்தில் வைரலான அந்த புகைப்படத்துக்கு பலர், ‘என்ன ஒரு அழகிய கேப் டிரைவர், எவ்வளவு பிஸியாக இருந்தாலும் உங்கள் சருமத்தை நீங்களும் இதுபோல் பாதுகாத்துக்கொள்ளுங்கள் பெண்களே’ என்பன போன்ற கருத்துக்களை சின சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வந்தனர்.


ஆனால் அவரை தேடிக்கண்டுபிடித்த டிராஃபிக் போலீசார் அவரின் நிர்வாகத்திடம் பேசி 3 நாட்கள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். காரணம் சீனாவில் முகத்தில் ஸ்கின் கேர் மாஸ்க் அணிந்து சருமத்தை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் இரவில் வாகனம் ஓட்டினால் அது அது டிரைவருக்கு தெளிவான பார்வையைக் கொடுக்காது என்பதாலும், இதனால் விபத்து நேரிடலாம் என்றும் கூறி இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கின்றன.

CHINA, CABDRIVER, SUPSPEND, SKINCAREMASK

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS