ரொம்ப கோவம் வருதா? அப்ப அடிச்சு நொறுக்குங்க.. அதுக்கு ஒரு கடையையே திறந்த நபர்!
Home > தமிழ் newsபலருக்கு கோபம் வந்தால் என்ன செய்வதென்று தெரியாது. அந்த மன அழுத்தத்தில் எதையாவது தூக்கி போட்டு உடைத்தால் தேவலாம் என்று தோன்றும்.
நம்மில் பலர் கோபம் வந்தால் செல்போன்களை உடைத்திருக்கக் கூடும். அவ்வாறு செய்யும் பொழுது கோபம் வந்த கணத்தில் செய்வதறியாது செய்த செயல்களுக்காக கோபம் கலைந்து, எல்லாவற்றையும் உணர்ந்த பிறகு கடைசியில் ஒரு தெளிவு பிறக்க கூடும்.
ஆனால், அப்படியான தெளிவு வந்தாலும் கோபத்தில் நாம் கொட்டிய வார்த்தைகளையும் உடைத்து சேதப்படுத்திய பொருட்களும் அப்படியே திரும்பி வருமா என்றால் கேள்விக்குறிதான். அதற்காகவே சீனாவின் பெய்ஜிங்கில், ஹான்ஜிங் என்பவர் கோபம் வந்தால் கண்ட பொருட்களை உடைப்பதற்கெனவே ஆங்கர் ரூம் என்றொரு கடையை திறந்துள்ளார்.
இந்த அறையில் கடைக்காரர் கொடுக்கும் பிரத்யேகமான ஆடையை அணிந்துகொண்டு வீட்டு உபயோகப்பொருட்களையோ திருமண புகைப்படங்களை வாடிக்கையாளர் தன் வீட்டில் இருந்து கொண்டு வந்தோ உடைத்து கோபத்தை தீர்த்துக்கொள்ள 30 நிமிடத்துக்கு 5 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுவருகிறது. இங்கு பெரும்பாலும் 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களே வருகின்றனர் என்கின்றார் அந்த கடை ஓனர்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- பேஸ்புக்கில் புரொஃபைல் மாற்றிய பெண்ணுக்கு காதலன் கொடுத்த கொடூர தண்டனை!
- கைதாகிறாரா மேத்யூஸ்?..‘அப்படி என்னதான் இருக்கு அந்த வீடியோவுல?’
- ‘நாம்தான் பிரபலப்படுத்த வேண்டும்’.. பால்வாடி பள்ளிக்கு மகளை அனுப்பும் மாவட்ட ஆட்சியர்!
- பிரபல ‘லக்கி’ கிரிக்கெட் பிளேயருக்கு நன்றி சொல்லி ட்வீட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்!
- ஒரு நாளைக்குள் பதில் சொல்ல பிசிசிஐ உத்தரவு - பகிரங்க மன்னிப்பு கேட்ட கிரிக்கெட் வீரர்!
- வெச்சு செஞ்ச சலூன்காரர்.. யூ-டியூப் வீடியோவால் ‘தலை’க்கு வந்த சோதனை!
- ‘ஹலோ போலீஸா.. ப்ளீஸ் என்ன காப்பாத்துங்க’..திருடச் சென்ற இடத்தில் உதவிக்கு அழைத்த திருடன்!
- நம்ப முடியுதா? சைக்கிள் மோதி டேமேஜ் ஆன கார்.. ஒண்ணுமே ஆகாத சைக்கிள்.. வைரல் வீடியோ!
- ‘யாராச்சும் பசியா இருக்கீங்களா?’.. தீபிகா ரசிகர்களுக்கு இந்த ரெஸ்டாரண்ட்டின் சர்ப்ரைஸ்!
- ‘அந்த சாதனையை முறியடிச்ச இவங்க ஒருத்தர் கூட அப்போ பொறக்கல’..ஆச்சரியமான உண்மை!