இந்த சேனலில் செய்தி வாசிப்பவர் மனிதர் அல்ல..வைரல் வீடியோ!

Home > தமிழ் news
By |

உலகத்தின் அடுத்த அத்தியாயமே ஆர்ட்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ்தான்.  வளர்ந்து வரும் நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா இதில் முன்னேறிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், சீனாவின் புகழ்பெற்ற ஸின்யுவா நியூஸ் சேனல் ஏஜென்ஸி தனது செய்தி நிறுவனத்தில் ஒரு ரோபோவை செய்தி வாசிப்பதற்கான அறிமுகப்படுத்தியுள்ளது.


மென்பொருள் தொழில்நுட்ப உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்த சாதனையை தனதாக்கிக்கொண்ட இந்த சீன செய்தி நிறுவனத்தின் ரோபோ, தனக்கு முன்னால் எழுத்து வடிவில் மிளிரும் செய்திகளை அப்படியே மனிதர்களை போலவே வாசிக்கிறது. இறுதியில், தங்குதடையற்ற செய்திகளை 24 மணி நேரமும் வழங்குவதாகவும் ஓய்வில்லாமலும் சோர்வடையாமலும் வாசிப்பதாக ரோபோவே அறிவிக்கிறது.

 

தற்போது செய்தி வாசிக்கும் இந்த ரோபோவை ஸாங் ஸோ என்பவரது உருவத்தின் மாதிரியாக தயாரித்துள்ளார்கள். மேற்கொண்டு இந்த தொழில்நுட்பம் பெருகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

AINEWSANCHOR, ARTIFICIALINTELLIGENCE, CHINA, ROBOT, VIRAL, VIDEO

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS