'ஆஸ்திரேலிய பௌலர்களை கதறவிட்ட இந்திய வீரர்'...அவுட்டானபோதும் அரங்கமே எழுந்து நின்று வாழ்த்து!

Home > தமிழ் news
By |

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில்,இந்திய அணியின் புஜாரா ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.

 

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இறுதி டெஸ்ட் போட்டியானது சிட்னியில் நடைபெற்று வருகிறது.டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி,முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் குவிந்திருந்தது.களத்தில் நின்ற புஜாரா சதம் அடித்து அசத்தியிருந்தார்.

 

இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது,நிதானமாக ஆடி வந்த ஹனும விஹாரி 42 ரன்னில் லயன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின்னர் இணைந்த புஜாரா,பன்ட் ஜோடி ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை தும்சம் செய்தனர்.இதனால் இந்திய அணியின் ஸ்கோரும்  நல்ல ரன்ரேட்டுடன் முன்னேறியது.

 

புஜாராவின் அதிரடியான மற்றும் நிதானமான  ஆட்டம் ஆஸ்திரேலிய பௌலர்களுக்கு பேரடியாக அமைந்தது.அவர்களும் பந்து வீச்சாளர்களை அடிக்கடி மாற்றி பார்த்தும் எந்த பயனும் இல்லாமல் போனது.புஜாராவின் ஆட்டம், இந்திய அணியின் தடுப்புச் சுவர் என்று அழைக்கப்படும் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டை நினைவுபடுத்துவதாக உள்ளது என பலரும் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.

 

இந்நிலையில் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட புஜாரா,லயனின் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.இருப்பினும் மைதானத்தில் இருந்த ரசிகர்கள், இந்திய வீரர்கள் என அனைவரும் எழுந்து நின்று புஜாராவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

 

ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அதிக பந்துகளை சந்தித்த இந்திய வீரர் என்ற பெருமையை புஜாரா பெற்றார். முன்னதாக 2003/04 -ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் டிராவிட் 1,203 பந்துகள் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

CRICKET, INDIA VS AUSTRALIA, CHETESHWAR PUJARA, SYDNEY, RAHUL DRAVID

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS