வீடியோ கால் மூலம் சிக்கிய விநோத செல்போன் திருடன்.. பரபரப்பு சம்பவம்!

Home > தமிழ் news
By |

சென்னையில் தனது செல்போனை திருடியவனை வீடியோ கால் செய்து அவனைப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்துள்ளார் ஒரு  இளைஞர்.  

மெரினாவில் உள்ள, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமான பணிக்காக கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்த நாயப்பள்ளியைச்  சேர்ந்த பொக்லைன் டிரைவரான வெள்ளையப்பன் (29) நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு வேலையை முடித்துவிட்டு அறைக்கு வந்து பார்க்கையில் தனது செல்போன் உட்பட நண்பர்கள்  அனைவரின் செல்போன்களும்  இல்லாததைக் கண்டு அதிர்சசியடைந்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதன் பின்னர் ஒரு நாள் வெள்ளையப்பன், திருடுபோன தனது செல்போன் எண்ணிற்கு வீடியோ கால் செய்துள்ளார். எதிர்முனையில் செல்போன்களை திருடி சென்ற அந்த நபர் எடுத்து பேசியுள்ளார்.அப்பொழுது  நண்பர்கள் உதவியுடன் அந்த  திருடனை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில்  அந்த நபர் கோவை மாவட்டத்தை சேர்ந்த பீளமேடு கருப்பண்ணகவுண்டம் பாளையத்தைச் சேர்ந்த  நல்லிவீரன் (28) என்றும் சென்னையில் தங்கி இரவு நேரங்களில் செல்போன்களைத் திருடிவந்ததும்  தெரியவந்துள்ளது. விசாரணை முடிவில் அவரிடமிருந்த 6 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். வீடியோ கால் மூலம் திருடனை பிடிபட்டுள்ள செய்தி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

TAMILNADU, CHENNAI, CELLPHONE, THIEF

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS