பேருந்துகளில் மாணவர்கள் அட்ராசிட்டி செய்வது போன்றவற்றை 80களில் வெளிவந்த சினிமாக்களில் வரும் பேருந்து காட்சிகளில் காண முடியும். அதன் பிறகு வெவ்வேறு காலக்கட்டத்தை தாண்டி பல வளர்ச்சிகளை நகரம் அடைந்திருக்கிறது. பலரும் படித்து நாகரிகமாக பணிபுரிகின்றனர். இருப்பினும் சென்னையின் மைய பகுதியில் இளைஞர்கள் செய்துள்ள காரியம் பலரிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. சென்னை காரனோடை முதல் பாரிமுனை வரை செல்லக்கூடிய அரசு பேருந்தின் தடம் எண் 57f.இந்த பேருந்தில் பல கல்லூரி மாணவர்கள் தினசரி பயணம் செய்வதுண்டு.
இந்நிலையில் இந்த பேருந்தில் இன்றைய தினம் காலையில், அலுவலக நேரத்தில் சென்னையின் மாதவரம் பக்கமாக வந்துகொண்டிருந்தபோது மாணவர்கள் சிலர் கைகளில் பெரிய பெரிய பட்டா கத்திகளை காட்டியும், பேருந்தில் இருந்தபடியே, சாலையில் பட்டை தீட்டியும் செல்பவர்களை அச்சுறுத்தியுமுள்ளனர். இதனை, பேருந்தின் அருகே வண்டி ஓட்டிச் சென்ற சிலர் வீடியோ பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். தகவல் அறிந்த சென்னை மாநகர காவல்துறை இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, அம்மாணவர்களைப் பற்றி விசாரித்ததில், இன்று பேருந்தி தினம் கொண்டாடும் விதத்தில் அவர்கள் இப்படி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த ’தடா’.. உயர்கல்வித்துறை அதிரடி!
- தமிழகத்தில் நாளை பள்ளி-கல்லூரி,அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை!
- ஒரே மருத்துவக் கல்லூரியில் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட மாணவிகள்!
- Medical school lowers entrance grades as it did not want too many female students
- மீன் விற்ற கேரள மாணவியை 'சமூக வலைதளத்தில்' கிண்டல் செய்தவர் கைது!
- 'யாருடைய உதவியும் தேவையில்லை'.. மீன் விற்கும் மாணவி குமுறல்!
- ஆற்றில் சிக்கித்தவித்த மாணவர்களை...விரைந்து மீட்ட காவல்துறை!
- “Juice Chill-nu illa”: Chennai college students thrash shop keeper
- Student strips down to underwear during presentation, here is why
- Students protest against top university management