சென்னை காரனோடை முதல் பாரிமுனை வரை செல்லக்கூடிய அரசு பேருந்தின் தடம் எண் 57f. இதில் பல கல்லூரி மாணவர்கள் தினசரி பயணம் செய்வதுண்டு. அதில் நேற்றைய தினம் காலையில், அலுவலக நேரத்தில் சென்னையின் மாதவரம் பக்கமாக வந்துகொண்டிருந்தபோது மாணவர்கள் சிலர் கைகளில் பெரிய பெரிய பட்டா கத்திகளை காட்டியும், பேருந்தில் இருந்தபடியே, சாலையில் பட்டை தீட்டியும் செல்பவர்களை அச்சுறுத்தியதை அவ்வழியே வண்டி ஓட்டிச் சென்ற சிலர் வீடியோ பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, பேருந்தில் பயணிப்பவர்களுக்கு இடையூறு அல்லது அச்சுறுத்தல் உண்டாகும் சூழல் ஏற்பட்டால், உடனே பேருந்தினை அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு ஓட்டிச் செல்ல ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- இன்ஜினியரிங் படிப்புக்கு என்னதான் ஆச்சு.. 1 லட்சத்துக்கும் மேல் காலி இருக்கைகள்!
- Junk food to be banned in colleges and universities?
- கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த ’தடா’.. உயர்கல்வித்துறை அதிரடி!
- Medical school lowers entrance grades as it did not want too many female students
- மீன் விற்ற கேரள மாணவியை 'சமூக வலைதளத்தில்' கிண்டல் செய்தவர் கைது!
- 'யாருடைய உதவியும் தேவையில்லை'.. மீன் விற்கும் மாணவி குமுறல்!
- ஆற்றில் சிக்கித்தவித்த மாணவர்களை...விரைந்து மீட்ட காவல்துறை!
- Chennai police to work on two shifts in the nights this month
- Chennai police detain over 3,000 persons after dozens of robberies on Sunday
- Student strips down to underwear during presentation, here is why