சென்னை மக்களின் அன்றாட போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிப்பது அரசு மாநகரப் பேருந்துகள், மின்சார ரயில்கள், பறக்கும் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள்.இருப்பினும் சென்னை மக்களின் தினசரி போக்குவரத்தில் இரண்டற கலந்து இருப்பது   ஷேர் ஆட்டோக்கள்.தினசரி சுமார் 10 ஆயிரம் ஷேர் ஆட்டோக்கள் சென்னை மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்துவருகிறது.

 

இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களை மிகக்கடுமையாக பாதித்துள்ளது.இதனால் பெரும்பாலான ஷேர் ஆட்டோக்களின் கட்டணம் சராசரியாக 5 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், தியாகராயநகரில் இருந்து அண்ணா நகருக்கான கட்டணம் 20 ரூபாயில் இருந்து 25 ரூபாயாகவும்; முகப்பேர் மேற்கு பகுதிக்கான கட்டணம் 35 ரூபாயிலிருந்து 40 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

அம்பத்தூரில் இருந்து வள்ளுவர் கோட்டத்திற்கு 30 ரூபாயில் இருந்து 35 ரூபாயாகவும், தியாகராய நகருக்கான கட்டணம் 45 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.அண்ணாநகர் எல்.ஐ.சி இடையேயான கட்டணம் 25 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகியுள்ளது.

 

தற்போது மஞ்சள் நிற ஷேர் ஆட்டோக்களின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. டாடா மேஜிக் எனப்படும் வெள்ளை நிற ஷேர் ஆட்டோகளில் குறிப்பாக, வாடகைக்கு எடுத்து இயக்கப்படும் வாகனங்களின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.இந்த கட்டண உயர்வு கல்லுரி மற்றும் அலுவலம் செல்பவர்களை கடுமையாக பாதிக்கும் என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

BY JENO | SEP 18, 2018 1:39 PM #PETROLPRICEHIKE #SHARE AUTO #CHENNAI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS