'கோயம்பேடு பேருந்து' நிலையத்திற்கு பெயர் மாற்றம்.. முன்னாள் முதல்வரின் பெயர் சூட்டப்பட்டது!

Home > தமிழ் news
By |

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

சென்னை புறநகர் பேருந்து நிலையம் அல்லது கோயம்பேடு பேருந்து நிலையம் என பரவலாக அழைக்கப்படும் இப்பேருந்து நிலையம் 37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெற்ற கோயம்பேடு பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சுமார் 103 கோடி ரூபாய் செலவில் கோயம்பேடு பேருந்து நிலையம்,2002-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ம் தேதியன்று அப்போதைய தமிழக முதலமைச்சர், ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. இப்பேருந்து நிலையம் ஒரே சமயத்தில் 270 பேருந்துகளையும், நாளொன்றுக்கு 2000 பேருந்துகளையும் 2 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டது. 

 

இந்த நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என்று சென்னையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதன்படி இன்று  கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்பட்டது.

AIADMK, EDAPPADIKPALANISWAMI, CHENNAI, KOYAMBEDU

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS