'எங்களுக்கு வேற வழி தெரியல'...துப்பரவுப் பணிக்கு விண்ணப்பித்த எம்.டெக், பி.டெக் பட்டதாரிகள்!
Home > தமிழ் newsதமிழக அரசின் துப்புரவு பணிகளுக்கான காலி இடங்களுக்கு,எம்.டெக், பி.டெக், எம்.பி.ஏ படித்த பட்டதாரிகள் விண்ணப்பித்து இருப்பது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலகமானது,சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருகிறது.அங்கு 14 துப்பரவுப் பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியிருந்தது.அந்த பணியில் சேர எம்.டெக், பி.டெக், எம்.பி.ஏ போன்ற உயர்கல்வி படித்த பட்டதாரிகள் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.மொத்தமுள்ள 14 காலி பணியிடங்களுக்கு 4,000-த்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்திருக்கிறார்கள்.இது தமிழகத்தில் நிலவி வரும் வேலை இல்லா திண்டாட்டத்தை காட்டுவதாக,பல்துறை வல்லுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
துப்பரவுப் பணிக்கு விண்ணப்பம் செய்த பட்டதாரிகளில் ஒருவரான தன்சிங்,பொறியியல் படித்துவிட்டு சரியான வேலை கிடைக்காததால்,தூத்துக்குடியில் தினக் கூலியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சென்னையில் நன்பர்களுடன் தங்கி அரசு கொடுத்த லேப்டாப் மூலம்,தான் தகுதி பெரும் வேலைகளுக்கு விண்ணப்பித்து வருகிறார்.
தனது நிலை குறித்து உருக்கமுடன் தெரிவித்த தன்சிங் ''ஒரு பொறியாளராக தகுதி பெற்று இருக்கிறேன்.ஆனால் 4 மாதங்களாக தேடியும் எந்த வேலையும் கிடைக்கவில்லை.இதனால் வேறு வழி தெரியாததால் துப்புரவு பணிக்கு விண்ணப்பித்து இருக்கிறேன் என வேதனையுடன் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து பேசிய தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ''இவ்வளவு பட்டதாரிகள் விண்ணப்பித்து இருப்பது நிச்சயம் வருத்தமான ஒன்று தான்.மாநில மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டியது அரசின் கடைமை தான்.
ஆனால் ஒரே ஆண்டில் 60 லட்சம் வேலைவாய்ப்பினை எங்களால் உருவாக்க முடியாது.இளைஞர்களும் அரசு வேலை தான் வேண்டும் என பிடிவாதமாக இருக்கிறார்கள்.ஆனால் அவர்கள் சுய தொழில் தொடங்கவும்,தனியார் துறையில் முயற்சிக்கவும் நிச்சயம் தவற கூடாது என தெரிவித்தார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- ’ப்ளீஸ்! இந்த நாட்டு நலனுக்காக, என்ஜினியரிங்க விட்டுடுப்பா’; மாணவனிடம் கெஞ்சிய கோர்ட்!
- "Please, don't be an engineer": Court to student who failed 17 exams
- This Engineer From Tamil Nadu Left His Job To Make Traditional Organic Sweets
- 'அது எனது குரலே அல்ல'.. அபார்ஷன் ஆடியோ குறித்து அமைச்சர் விளக்கம்!
- D Jayakumar's response to the abortion audio clip
- "Engineering sucks": 18-year-old IITian commits suicide
- வீரமிகு தமிழ்நாட்டின்,தீரமிகு தமிழ்மகன்....ஜப்பானிலிருந்து ஜெயக்குமார்...சிங்கக்குட்டியுடன் கவிதை !
- D Jayakumar pens poem in Japan to his 'son', a lion cub
- Such big projects lead to nation’s development: Rajinikanth on Chennai-Salem expressway
- CAG calls 2015 Chennai Floods man-made, blames govt