’படத்தில் இந்தந்த காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்தவை’.. பாராட்டிய துணை கமிஷனர்!
Home > தமிழ் newsசென்னையில் உள்ள தலைமையிட கமிஷனர் அலுவலகத்தின் துணை கமிஷனர் அர்ஜூன் சரவணன் விஸ்வாசம் படத்தை பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதோடு, குறிப்பிட்ட சில காட்சிகளுக்காக வெகுவாக பாராட்டியுள்ளார்.
‘சமீபத்தில் வெளியான நடிகர் அஜீத்குமார் நடித்த விஸ்வாசம் படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் கதை, பாடல்,நடிப்பு, சண்டைகாட்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று பிடித்திருந்தாலும் எனக்கு சில காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது’ என்று கூறியவர் அந்த காட்சிகளை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, ‘படத்தில் கதாநாயகன் , கதாநாயகி இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மட் அணிந்து செல்வது.கதாநாயகன் கார் ஒட்டும் போதெல்லாம் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது. தனது மகளின் உயிரை காப்பாற்ற செல்லும் அவசரத்தில் கூட சீட் பெல்ட் அணிந்து செல்வது’ உள்ளிட்ட காட்சிகளை பாராட்டியுள்ளார்.
மேலும், இந்தியாவில் சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயரிழக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித்குமார் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றி நடிக்கும் போது அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே தனது அவா என்று கூறியவர், விஸ்வாசம் படத்தின் கதாநாயகன் அஜீத்குமார் மற்றும் இயக்குநர் சிவா மற்றம் அவரது குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- செல்போன் சார்ஜரால் பெண்கள் விடுதியில் தீவிபத்து.. 5 பேர் படுகாயம்.. சோக பின்னணி!
- வீடியோ கால் மூலம் சிக்கிய விநோத செல்போன் திருடன்.. பரபரப்பு சம்பவம்!
- Car catches fire on Alwarpet Bridge! Shocking visuals go viral
- Group conducts funeral for helmet as it causes hair loss
- These areas in Chennai to face 8-hour power cut on Friday
- 'கட்சி பணத்த செலவு பண்ணுங்க'..பொங்கல் பரிசு விஷயத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி!
- டாஸ்மாக் அழைத்துச் சென்ற தந்தையால் 5 வயது மகனுக்கு வந்த வினை!
- ‘2 நாளாக போனை எடுக்காத மகள்’.. ஐஐடி வளாக விடுதியில் அதிர்ச்சி சம்பவம்!
- 'நியூ இயர்'னா டபுள் சந்தோசம்'...'தல' ஸ்டைலில் வாழ்த்திய மதுரை காவல்துறை...வைரலாகும் மீம்ஸ்!
- நள்ளிரவில் சிசிடிவியை திருப்பிய இளைஞர்கள்.. நேரில் அழைத்து இனிப்பு வழங்கிய கமிஷ்னர்!