சென்னை: அயனாவரம் பகுதியில் வசித்து வந்தவர் பரிமளா. கணவர் கோவிந்தராஜனை இழந்து வாழ்ந்துவந்த பரிமளா கடந்த 31ம் தேதி முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

 

அப்பொழுது விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை உதவி ஆணையர் பாலமுருகன், கொலை செய்யப்பட்ட பரிமளாவுக்கு விடுதியில் வளர்ந்து வரும் 13 வயதுடைய கார்த்திக் என்கிற மகன் உள்ளதை அறிந்தார்.  ஆனாலும் உடன் இருந்த காவல்துறை ஆய்வாளர், கார்த்திக்கிடம் தன் தாய் இறந்ததை கூறவில்லை என்று கூற, எப்படியும் கூறித்தானே ஆகவேண்டும் என்று பதில் அளித்த பாலமுருகன், ஸ்டேஷனுக்குச் சென்று அங்கு அமர்த்தி வைக்கப்பட்ட கார்த்திக்கிடம் பக்குவமாக எடுத்துக் கூறினார்.

 

ஆனால் தாயை பிரிந்ததை தாங்கிக்கொள்ள முடியாமல் 13 வயது கார்த்திக் வெடித்து அழுததை பார்த்த பாலமுருகன், கார்த்திக் தாயைத் தவிர சொந்தம் என யாரும் இல்லாத சிறுவன் என்பதை அறிந்தவுடன் தானே தத்தெடுத்து வளர்ப்பதாகக் கூறி தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அவனுக்கு உடைகளை வழங்கியுள்ளார். 

 

ஏற்கனவே இரண்டு குழந்தைகளை உடைய பாலருகன், இந்த பாலகனையும் தன் மகனாக ஏற்று தத்தெடுத்துள்ள நெகிழ்ச்சியான இந்த செயலை காவல் துறை உட்பட பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

BY SIVA SANKAR | SEP 4, 2018 3:43 PM #POLICE #TAMILNADUPOLICE #BALAMURUGAN #KARTHIK #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS