சென்னை காரனோடை முதல் பாரிமுனை வரை செல்லக்கூடிய அரசு பேருந்தின் தடம் எண் 57fல் நேற்றைய தினம் மாணவர்கள் சிலர் கைகளில் பெரிய பெரிய பட்டா கத்திகளை காட்டியும், பேருந்தில் இருந்தபடியே, சாலையில் பட்டை தீட்டியும் பயணித்தனர். இதனால் பயணிகள் பலரும் பயம் கொண்டனர். இவ்வாறு பயணிகளை அச்சுறுத்தி மாணவர்கள் பயணித்ததை அவ்வழியே வண்டி ஓட்டிச் சென்ற சிலர் வீடியோ பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.
இதனை அடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 கல்லூரி மாணவர்களும், அதே பேருந்து பயணத்தில் ஈடுபட்ட ஆனந்தராஜ் என்பவர் அளித்த தகவலின் பேரில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட அம்மாணவர்களை அவர்களி பெற்றோர்கள் அடிக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஒரு சில மாணவர்கள் செய்யும் தவறினால், அனைத்து மாணவர்களும் தவறாக சித்தரிக்கப்படுவதாகவும், குடும்பம்-நண்பர்கள்-பிறர் என எல்லாரிடமும் அன்பாக உதவும் மனப்பான்மையை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேசியுள்ளார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Junk food to be banned in colleges and universities?
- கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஜங்க் ஃபுட்டிற்கு தடை !
- கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த ’தடா’.. உயர்கல்வித்துறை அதிரடி!
- தமிழகத்தில் நாளை பள்ளி-கல்லூரி,அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை!
- ஒரே மருத்துவக் கல்லூரியில் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட மாணவிகள்!
- மீன் விற்ற கேரள மாணவியை 'சமூக வலைதளத்தில்' கிண்டல் செய்தவர் கைது!
- 'யாருடைய உதவியும் தேவையில்லை'.. மீன் விற்கும் மாணவி குமுறல்!
- ஆற்றில் சிக்கித்தவித்த மாணவர்களை...விரைந்து மீட்ட காவல்துறை!
- “Juice Chill-nu illa”: Chennai college students thrash shop keeper
- Shocking - College student beaten up, caught on CCTV