‘இதென்ன மியூசியமா?’.. அடியோடு மாறிய சென்னையின் முக்கிய ரயில் நிலையம்!

Home > News Shots > தமிழ் news
By |

இரயில் பயணிகளுக்கு உற்சாகமூட்டவும், உத்வேகமூட்டவும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் அமைப்பை வண்ணமூட்டும் ஓவியங்களால் அடியோடு மாற்றி அமைத்துள்ளனர்.

முன்னதாக சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தை ஆக்கிரமித்திருந்த சின்னஞ்சிறு பெட்டிக்கடைகளையும், உணவு விடுதிகளையும் இரயில்வே அதிகாரிகள் காலி செய்யுமாறு உத்தரவிட்டிருந்தனர். இதனையடுத்து இரயில் நிலையத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன.

சொல்லப்போனால் இரயில் நிலையம் முழுக்க கலைக்கூடமாக மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. பயணிகளை கவரும் வகையில் வரலாற்று சிறப்பு பெற்ற ஓவியங்கள் சுவர்களிலும், மேற்கூரையின் உட்புறத்திலும் நிறைந்திருக்கின்றன. இவற்றுடன் இந்திய தேசத் தலைவர்களின் படங்களும் ஆங்காங்கே இடம் பெற்றிருக்கின்றன.

சென்ட்ரல் ரயில் நிலையத்தின் இந்த புதிய மாற்றம் குறித்து சென்ட்ரல் ரயில் நிலைய அதிகாரி குகநேசன் பேசியபோது, ‘பயணிகள் பலவாறான மனநிலையில் தங்கள் பயணத்தை தொடங்குகின்றனர். அவர்களுக்கு புத்தம் புதிய அனுபவங்களையும், உணர்வுகளையும் கொடுக்க யோசித்தோம். அதன்படிதான் சென்னையின் பிரபல ஓவியர்களை அழைத்து திட்டமிட்டு இதனை செய்தோம்’ என்றார்.

பயணிகளிடம் இந்த ஓவியங்கள் பிரபலமாக பேசப்படும் நிலையில், இதேபோன்று மூர்மார்க்கெட் காம்ளக்ஸிலும் ஓவியங்கள் வரையப்பட இருப்பதாகவும், அதனையடுத்து சென்னை இரயில் நிலையத்தில் நிரந்தர புகைப்பட அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட இருப்பதாகவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

CHENNAI, RAILWAYSTATION, CENTRAL

OTHER NEWS SHOTS

RELATED NEWS STORIES