இன்று தொடங்கி அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

 

இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.கடந்த வருடம் முதல் கிருஷ்ணகிரி,தர்மபுரி,வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சரியான மழை இல்லை.ஆனால் இந்த 15 நாட்கள் நல்ல மழையைப் பெறும்.

 

இதையடுத்து காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் மழை பொழியும் வாய்ப்புண்டு. குறிப்பாக 10,12,13 ஆகிய நாள்களில் நல்ல இடியுடன் கூடிய மழை பொழியும். வெள்ளத்துக்கு வாய்ப்பில்லை. அதனால் வதந்திகளை நம்ப வேண்டாம்.

 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS