தற்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 83.54 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 76.64 காசுகளாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்த வாரங்களிலேயே இந்த எதிர்பாராத விலையேற்றம் உழைக்கும் மக்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

 

இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான வரிவிதிப்பு ஜிஎஸ்டியில் கொண்டு வரப்பட வேண்டும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

 

மேலும் இதுகுறித்து அவர் கூறும்போது, மக்களின் பிரச்னையை உணர்கிறோம் என்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்ததால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

BY SIVA SANKAR | SEP 8, 2018 12:04 PM #PERTROLPRICE #PETROLHIKE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS