'கன்னியாஸ்திரிகளுக்கு நடக்கும் வன்கொடுமைகள் உண்மைதான்'.. ஒப்புக்கொண்ட போப்.. பரபரப்பில் மதகுருமார்கள்!

Home > தமிழ் news
By |

அண்மையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து திரும்பும்போது பத்திரிகையாளர்களை சந்தித்தார் போப் பிரான்சிஸ்.

அப்போது அவர் கூறிய விஷயங்கள் அகில உலக அளவில் மதகுருமார்களிடையேயும், போதகர்களிடையேயும் பெரும் பதற்றத்தை உருவாக்கியதோடு மதகுருமார்களிடம் தங்கள் குழந்தைகளை சீடர்களாக அனுப்பும் பெற்றோர்களிடையே மேற்கொண்டு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. 

காரணம் போப் பிரான்சிஸ் அங்கு நடக்கும் உண்மைகளை சுக்குநூறாய் போட்டு உடைத்ததுதான். ‘நன்’ முறையில் தூய்மையான உள்ளத்துடன் இறைத் தொண்டு செய்யும் நோக்கில் வரும் கன்னியாஸ்திரிகளை அங்குள்ள கத்தோலிக்க பிஷப்கள் தவறாக பயன்படுத்திக் கொள்வதாகவும், இதற்கு பணிக்கப்பட்டே அப்பெண்களில் சிலரின் வாழ்க்கை முறை மாறிவிட்டதாகவும் போப் பிரான்சிஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.

இவ்வாறு போப் பிரான்சிஸே பிஷப்புகளும், அங்குள்ள மத போதகர்களும் கன்னியாஸ்திரிகளிடம் தவறான அணுகுமுறைகளுடன் நடந்துகொள்வதாக ஒப்புக்கொண்டது அனைவருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது. கடந்த வாரம் வாடிகனின் பெண்கள் சார்ந்த பத்திரிகை ஒன்றில் இதுபற்றிய முழுமையான கட்டுரை ஒன்று வெளியானதை அடுத்து இந்த விஷயம் பெரும் சலனத்தை உண்டுபண்ணியது. அதன் பிறகே பத்திரிகையாளர்கள் போப்பிடம் இந்த கேள்விகளை கேட்டுள்ளனர்.

மேற்கொண்டு இந்த கேள்விகளுக்கு பதில் அளித்த போப், பொதுவாக பெண்களை தரக்குறைவாக பார்க்கும் ஆண்களின் மனப்பான்மைதான் இதற்குக் காரணம் என்று கூறிய போப், இவற்றைத் தடுக்க வாடிகனில் பல்வேறு முயற்சிகள் நடந்துகொண்டிருப்பதாகவும், மேலும் இதுபோன்ற செயல்களில் கன்னியாஸ்திரிகள் தொடர்ந்த வழக்குகள் விசாரிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

SEXUALABUSE, POPE FRANCIS, SHOCKING, BIZARRE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS