வடமாநிலங்களில் தற்போது கடுமையான மழை பெய்து வருகிறது.இதனால் பல ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.முப்படையை சேர்ந்த வீரர்கள் மற்றும் தேசியபேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.கடுமையான வெள்ளத்தின் காரணமாக ஆறுகளில் ஆபாய அளவை தாண்டி வெள்ளம் சென்றுக்கொண்டிருக்கிறது.

 

இந்நிலையில் சட்டிஸ்கர் மாநிலத்தின் கோரியா மாவட்டத்தில் உள்ள ஆற்று பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாய அளவை தாண்டி கடுமையான அளவிற்கு வெள்ளம் சென்றுக்கொண்டிருந்தது.இந்நிலையில் அந்த ஆற்றுப் பகுதியை வாகனம் ஓன்று கடக்க முற்பட்டது.அந்த வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் அந்த வாகனம் அடித்து செல்லப்பட்டது.

 

அங்கு வந்த மீட்பு குழுவினர் அந்த வாகனத்தில் இருந்த 3 பேரையும் பத்திரமாக மீட்டனர்.அவர்களுக்கு முதலுதவி அளிக்கபட்ட பின்பு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

BY JENO | SEP 8, 2018 3:40 PM #FLOOD #CAR WASHED #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS