200 நோயாளிகள்..மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்.. பரவும் வீடியோ!
Home > தமிழ் newsஒடிசாவில் மின்விளக்கே இல்லாமல், மெழுகுவர்த்திகளையும் டார்ச் லைட்டுகளையும் வைத்துக்கொண்டு மருத்துவர்கள் மருத்துவம் பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மருத்துவம் என்பது உடலின் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றையும் தெளிவாக கண்காணித்து அவற்றிற்கு முறையாக பரிசோதனை செய்வதுதான். அதற்காகத்தான் உள்ளுடலை ஸ்கேன் செய்யும் முறைகள் கூட வந்தன.
ஆனால் ஒடிசாவில் மாயூர் பாஞ்சில் உள்ள ரூரன் பிளாக் மருத்துவமனையில் மருத்துவம் பார்த்த வீடியோதான் தற்போது வெளியாகியுள்ளது. இங்கு மருத்துவர்களும் நோயாளியின் உறவினர்களும் சுற்றி நிற்கையில், நடுவில் இருக்கும் மெத்தையில் படுத்திருக்கும் நோயாளிக்கு அருகே டார்ச் லைட்டை ஒருவரும், இன்னொருபுறம் மெழுகுவர்த்தியை ஒருவரும் கையில் ஏந்தியபடி நிற்க, மருத்துவர் மருத்துவம் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
இத்தனை ஆபத்தான, அவலநிலை ஏற்பட்டுள்ள இந்த ஒடிசா மருத்துமனையா என பலரும், நேற்றைய தினம் மருத்துவம் அளிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட இந்த வீடியோவைப் பார்த்து ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுபற்றி கூறியுள்ள அந்த மருத்துமனை மருத்துவர் ஒருவர், ‘தினமும் 200 நோயாளிகள் வரும் இந்த மருத்துவமனையில் மின்சாரம் இருந்தாலும் இல்லை என்றாலும் நான் சிகிச்சை பார்த்தாக வேண்டிய சூழலில்தான், ஏற்பட்ட திடீர் மின்சார தட்டுப்பாடு உண்டாகி மின்சாரம் தடைபட்டது. இருப்பினும் நாங்கள் மருத்துவம் பார்த்தோம்’ என்று கூறினார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- These major areas in Chennai to face power cut on Tuesday
- List of Chennai areas facing power cut for Thursday
- மாற்றுத்திறனாளியை தலைகீழாக 'தொங்கவிட்டு' நெருப்பு வைத்த கொடூரம்!
- This Cop Has A Quirky Way To Manage Traffic On Roads; Here's How
- Chennai areas to face power cut for Friday. Check list here
- Using Feet As Hands: This 12-Yr-Old Proves That Nothing Is Impossible
- List of Chennai areas to face power cut for Monday
- Chennai: List of areas to face power cut on Thursday
- Chennai: List of areas to have 7-hour power cut on Monday
- 4 Chennai areas to face power-cut on Wednesday