கேன் தண்ணீர் உற்பத்தியாளர்களின் போராட்டம் வாபஸ்..எனினும்!

Home > தமிழ் news
By |

தமிழகத்தில் கடந்த ஓரிரு நாட்களாக நிலத்தடி நீர் எடுப்பதற்கான தடை உத்தரவினை தமிழக அரசு ஆணையாக பிறப்பித்திருந்ததை அடுத்து மினரல் வாட்டர் கேன் உற்பத்தியாளர் சங்கம் மற்றும் லாரி உற்பத்தியாளர்கள் சங்கம் இணைந்து தண்ணீர் சப்ளை மற்றும் குடிநீர் விநியோகம் மற்றும் கேன் உற்பத்தி முதலானவற்றை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

 

இந்த நிலையில் கேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். எனினும் தண்ணீர் எடுக்க அனுமதி அளிக்கப்படாததால், தண்ணீர் லாரி உரிமையாளர்களின் போராட்டம் நீடிப்பதாகத் தெரிகிறது. இதனை அடுத்து அவர்களுடனான பேச்சுவார்த்தை நிகழ்கிறது. ஒருவேளை இதில் சுமூகமான முடிவு எட்டாவிடில், மீண்டும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

 

இது குறித்து பேசிய அமைச்சர் வேலுமணி, ’இந்த தற்காலிக நிலையை சமாளிக்க, இயல்பு நிலை திரும்பும் வரை காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை குடிநீர் விநியோகமானது, குடிநீர் வாரியம் மூலமாக செய்யப்படும்’ என்று அறிவித்துள்ளார். 

CANWATERASSOCIATION, WATERDISTRIBUTION, WATERLORRYSTRIKE

OTHER NEWS SHOTS