40 வயதில் 44 குழந்தைகளுக்குத் தாயான பெண்மணி..வைரல்!

Home > தமிழ் news
By |

ஆப்பிரிக்காவின் உகாண்டாவில் உள்ளது கபிம்பிரி கிராமம். இங்கு வசித்து வரும் 40 வயதான மரியம் நபாடன்ஸி எனும் பெண்மணி நாட்டிலேயே அதிகபட்சமாக 44 குழந்தைகளை ஈன்றவர் என்கிற பெருமையைச்  சேர்த்துள்ளார். ஏறக்குறைய அந்நாட்டின் தலைப்புச் செய்தியாக மாறி வைரலாகி வரும் மரியம் நபாடன்ஸிக்கு திருமணமானதோ 12 வயதிலாம்.


இத்தனைக்கும் கணவர் மூலம் பல கொடுமைகளை அனுபவித்துவந்தவர். 18 ஆண்டுகளாக பேறுகால பெண்மணியாகவே வாழ்ந்து வந்துள்ள மரியத்தின் கருப்பையில் மரபணு சார்ந்து உண்டான சில மாற்றங்களால் இதுபோன்று அதிக கருமுட்டைகள் உருவாகியதாகவும், கருவை கலைத்தால் உயிருக்கு ஆபத்து என்பதால் 44 குழந்தைகளை பெற்ற பிறகே கருப்பையை நீக்கியுள்ளார்.

 

ஆறு முறை இரட்டை குழந்தைகளாக 12 குழந்தைகளையும், நான்கு முறை மும்மூன்று குழந்தைகளாக 12 குழந்தைகளையும், மூன்று முறை நிகழ்ந்த பிரசவங்களில் 14 குழந்தைகளையும் பெற்றெடுத்திருக்கிறார். எனினும் தற்போது உயிருடன் இருக்கும் 38 குழந்தைகளையும் தானே வேலைக்குச் சென்று காப்பாற்றி வருகிறார். 

UGANDA, MOTHER, MOTHERFOR44, VIRAL

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS