வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச தொகையை (Minimum Balance) பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள்,ரூ.5 ஆயிரம் கோடியை அபராதமாக வசூலித்துள்ளன.அதில் பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ), 2017-18 நிதியாண்டில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து, 2433.87 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பிரதாப் சுக்லா தெரிவித்துள்ளார்.
குறைந்த இருப்பு பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்காமல் நீண்டகாலம் இருந்த நிலையில்,கடந்த ஆண்டு இதை எஸ்பிஐ வங்கி மீண்டும் அறிமுகம் செய்தது. அப்போது,குறைந்தபட்ச இருப்பு தொகையை முன்பு இருந்ததைக் காட்டிலும் இரு மடங்கு உயர்த்தியது.
பாரத ஸ்டேட் வங்கி சேமிப்பு கணக்கிற்கான குறைதபட்ச இருப்பு தொகையை 5000 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாகக் குறைத்தது. ஓய்வூதியதாரர்கள்,மைனர்களின் கணக்குகளுக்கு குறைந்த பட்ச இருப்புத் தொகை தேவையில்லை என்று மாற்றி அமைத்தது. கிராமப்புற வங்கி வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் இருப்பு தொகையாக ரூ.1000 வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த அபராத முறை அறிமுகப்படுத்தப்பட்டு 8 மாதங்களில் அதாவது 2017-18 ஏப்ரல் முதல் 2018- ஜனவரி மாதம் வரை எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்து,ரூ.1,700 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, எச்டிஎப்சி வங்கி ரூ.590 கோடியையும், ஆக்சிஸ் வங்கி ரூ.530 கோடியையும், ஐசிஐசிஐ வங்கி ரூ.317 கோடியையும், பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.211 கோடியையும் வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக வசூலித்துள்ளன.இதில் எஸ்பிஐ வங்கி விதிக்கும் அபராத விகிதத்தைக் காட்டிலும், தனியார் வங்கிகளான எச்டிஎப்சி, ஐசிஐசிஐ,ஆக்சிஸ் வங்கிகள் விதிக்கும் அபராதத்தின் அளவு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- SBI reduces charges for non-maintenance of minimum balance
- Huge amount vanished from SBI accounts
- SBI likely to reduce minimum balance requirement
- SBI reduces interest rates on loans