‘திடீரென தீப்பிடித்த பேருந்து, ஓட்டுநரின் முடிவால் உயிர் தப்பிய பயணிகள்’..சென்னையில் பரபரப்பு!

Home > News Shots > தமிழ் news
By |

பெருங்களத்தூர் அருகே ஆம்னி பேருந்து திடீரென தீப்பிடித்து எறிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நேற்றிரவு சென்னை கோயம்பேட்டில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று 35 பயணிகளுடன் தேனி நோக்கி சென்றுள்ளது. இரவு 9:30 மணியளவில் பேருந்து பெருங்களுத்தூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது பேருந்தின் முன்னால் இருந்து லேசாகா புகை வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியான ஓட்டுநர் பாண்டியன் என்பவர் உடனடியாக பேருந்தை நிறுத்தியுள்ளார். உடனே பேருந்தில் இருந்த பயணிகளை ஓட்டுநர் கீழே இறங்க சொல்லியதை அடுத்து பயணிகள் அனைவரும் வேகமாக பேருந்தில் இருந்து கீழே இறங்கினர்.

பயணிகள் அனைவரும் கீழே இறங்கியதும் பேருந்து முழுவதுமாக தீப்பிடித்து எறிந்தது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நிலவியது. இதனை அடுத்து தீ அணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்ததால் தீ அணைப்புத் துறையினரால் விரைந்து வர முடியவில்லை. இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் பயணிகள் அனைவரும் காயங்கள் ஏதும் இல்லாமல் உயிர்தப்பினர்.

CHENNAI, BUS, FIRE ACCIDENT, BIZARRE

OTHER NEWS SHOTS

RELATED NEWS STORIES