இந்தியாவின் மெட்ரோ நகரங்களாக சென்னை, மும்பை, கல்கத்தா மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்கள் அறியப்படுகின்றன. சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் நீண்ட கால அடிப்படையில் தொடங்கப்பட்டு, ஓரளவிற்கு நிறைவேற்றப்பட்டது. எனினும் திட்டத்தின் எஞ்சிய செயல்பாடுகள் தொடர்ந்தபடியே உள்ளன. பயணிகளுக்கான மின்சார ரயில், பறக்கும் ரயில்,  மெட்ரோ ரயில் ஆகியவை சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டு  இயங்கிக் கொண்டிருக்கின்றன. 

 

ஆனால் மேற்பட்ட முக்கிய நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் என்பது அதிகமாகவே உள்ளது. மெயில் எனப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களே இந்த மெட்ரோ நகரங்களுக்கு இடையிலான தரைவழி போக்குவரத்துக்கு பெருமளவில் உதவுகின்றன.

 

இந்த நிலையில், வரும் 2022-ஆம் ஆண்டு முதல் மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் சேவை தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேற்கண்ட மெட்ரோ நகரங்களுக்கு இடையிலான புல்லட் ரயில் திட்டமானது, இத்திட்டத்தின் முன்னோடிகளான பிரான்ஸ், ஸ்பெயின், சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் உள்ள நிபுணர்களின் உதவியுடன் இந்தியாவில் தொடங்கப்பட உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

BY SIVA SANKAR | AUG 11, 2018 1:08 PM #CHENNAI #METROCITY #BULLETTRAIN #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS