இது என்ன விசித்திரமான ஆசை...'புதுமண ஜோடியின் விபரீதமான திருமண கொண்டாட்டம்'!

Home > தமிழ் news
By |

அமெரிக்காவில் திருமணமான புது ஜோடி,தங்களுக்கு திருமணமான மகிழ்ச்சியை வெளிப்படுத்த செய்த சாகசம் அனைவருக்கும் அதிர்ச்சியையும்,ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.

 

அயோவா மாநிலத்தை சேர்ந்த ஏப்ரில் சோய் மற்றும் பெத்தனி பைர்னஸ் ஆகிய இருவரும் நெருங்கிய தோழிகள்.அதோடு இருவரும் தன்பால் ஈர்பாளர்கள் ஆகும்.அவர்கள் இருவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைப்பெற்றது.அந்த மகிழ்ச்சியை கொண்டாட அவர்கள் செய்த செயல் தற்போது ட்ரெண்டாகி உள்ளது.

 

இதற்காக இருவரும் வெர்னான் என்ற குன்றுப் பகுதிக்கு அவர்களின் நண்பர்களோடு சென்றார்கள்.தொடர்ந்து திருமண ஆடையில் தீ வைக்குமாறு அவர்களின் நண்பர்களை கேட்டுக்கொண்டார்கள்.அதன்படி நண்பர்களும் ஏப்ரில் மற்றும் பெத்தனியின் திருமண ஆடையில் தீ வைத்தார்கள்.தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

 

ஆனால் அதை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் போட்டோவிற்கு ஆர்வமாக போஸ் கொடுத்து கொண்டு இருந்தார்கள்.அடுத்த சில நொடிகளில் தீப்பற்றிய மேலங்கி கழன்று விழுந்ததும்,ஆனந்தமாய் முத்தமிட்டு தங்களின் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார்கள்.

BURNING LOVE, APRIL CHOI, BETHANY BYRNES

OTHER NEWS SHOTS