#MeToo எதிரொலி: ஷூட்டிங்கை பாதியில் நிறுத்தி..நாடு திரும்பிய 'டாப்'நடிகர்!

Home > தமிழ் news
By |

கடந்த ஆண்டு ட்விட்டரில் #MeToo என்னும் ஹேஷ்டேக் மிகவும் பிரபலமாகியது. காரணம் பெண்கள் தங்களுக்கு நடந்த அநீதிகளை இந்த ஹேஷ்டேக்கில் வெளிப்படையாகத் தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் பிரபலங்களும்  தங்களுக்கு நடைபெற்ற அநீதிகளை இதில் பதிவிட்டனர். இதனால் இந்த ஹேஷ்டேக் மீண்டும் பிரபலமடைந்து வருகிறது.

 

இந்தநிலையில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்ஷய் குமார் #MeToo பிரச்சினையால் ஷூட்டிங்கை பாதியில் நிறுத்தி நாடு திரும்பியுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில்,'' நான் நேற்று இரவுதான் இந்தியா திரும்பினேன். வந்ததும் இங்கு நடைபெறும் பிரச்சினைகளை படித்தேன். அவை எனக்கு மிகுந்த கவலையளிக்கின்றன.

 

இந்த பிரச்சினைகள் முடியும்வரை 'ஹவுஸ்ஃபுல் 4' படத்தின் ஷூட்டிங்கை நிறுத்தி வைக்குமாறு தயாரிப்பாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளேன்.குற்றம் சுமத்தப்பட்டவர்களுடன் இணைந்து பணிபுரிய எனக்கு விருப்பம் இல்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்,'' என தெரிவித்துள்ளார்.

 

ஹவுஸ்ஃபுல் படத்தின் இயக்குநர் சஜீத் கான் மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, அக்ஷய் குமார் இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2.0, AKSHAYKUMAR, #METOO

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS