‘100 ஆண்டுகளுக்கு பிறகு கேமராவில் பதிவான அதிசய விலங்கு’..வைரல் போட்டோ!

Home > News Shots > தமிழ் news
By |

ஆப்பிரிக்க காடுகளில் 100 வருடங்களுக்கு பிறகு கேமராவில் பிடிபட்ட கருஞ்சிறுத்தையின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தை சேர்ந்த வன உயிரின புகைப்படக் கலைஞரான வில்பரட் லூக்காஸ் என்பவர் வன உயிரினங்களை புகைப்படம் பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர் கென்யாவில் உள்ள வனப்பகுதிக்கு புகைப்படம் எடுக்கச் சென்றிருந்தார்.

அப்போது லைக்கெப்பியா என்கிற இடத்தில் அரிய வகையான கருஞ்சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதை அறிந்து, கருஞ்சிறுத்தையை படம் பிடிக்கும் வகையில் பல இடங்களில் தானியங்கி கேமராக்களை பொருத்தியுள்ளார்.

இதனை அடுத்து வழக்கம் போல கென்யாவின் வனப்பகுதியில் கருஞ்சிறுத்தை சுற்றித்திரிந்துள்ளது.  அப்போது வில்பரட் பொருத்தியிருந்த தானியங்கி கேமராவில் கருஞ்சிறுத்தையின் புகைப்படம் பதிவாகியது. இரவில் கேமராவில் இருந்து வரும் விளக்கின் வெளிச்சத்தை வெறித்துப் பார்க்கும் கருஞ்சிறுத்தையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கடந்த 100 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்பிரிக்க வனப்பகுதியில் படம் பிடிக்கப்பட்ட முதல் கருஞ்சிறுத்தை இது என்பது குறிப்பிடத்தக்கது.

AFRICA, BLACKAFRICANLEOPARD, VIRALPHOTO

OTHER NEWS SHOTS

RELATED NEWS STORIES