திரைப்படங்களில் மட்டுமே நாம் விசித்திரமான சில திருடர்களை பார்த்திருப்போம். அவர்களுக்கென்று ஒரு கொள்கை இருக்கும். இந்த பொருளைத்தான் திருடுவது, திருடிய பொருளை இந்த செயலுக்கு மட்டுமே பயன்படுத்துவது என்றும் சில கொள்கைகளுடன் இருப்பார்கள்.


அமெரிக்காவின் விர்ஜினாவில் உள்ள ரோவனாக்கேவில் உள்ள தி ரோவனாக்கே எனும் ஷூ கடையில் அதிகாலை 4.20க்கு திருடிக்கொண்டிருந்த இந்த திருடர் மாஸ்க் அணிந்துள்ளார். சிசிடிவி ஃபுட்டேஜில் பதிவாகியுள்ள இவரது திருட்டு செயலில் ஆச்சரியமூட்டியது என்னவென்றால், தலைவர் திருடியவை எல்லாமே வலது கால் ஷூக்கள்தான்.

 

இடது, வலது என ஜோடி ஷூக்களாக இருந்தால் கூட, இரண்டு கால்களிலும் அணிந்துகொள்ள முடியும். அதை விட்டுவிட்டு, வலது கால் ஷூ-வை மட்டும் திருடியுள்ள இந்த திருடர் உண்மையில் தெரிந்து திருடியுள்ளாரா தெரியாமல் திருடியுள்ளாரா என்று கடை உரிமையாளர்களும் போலீஸ்காரர்களும் குழம்பியுள்ளனர்.

BY SIVA SANKAR | SEP 5, 2018 6:10 PM #ROBBERY #BIZARRE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS