ஒரு முதல்வரால் அறிமுகமாகி, இரண்டு முதல்வர்களுடன் நடித்த சிவாஜியின் 91வது பிறந்த தினம்!

Home > தமிழ் news
By |

நடிகர் சிவாஜி கணேசனின் 91-வது பிறந்தநாளையொட்டி, அடையாறு மணிமண்டபத்திலுள்ள அவரது உருவ படத்திற்கு துணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செய்தார்.

 

மறைந்த முதல்வர் எம்ஜிஆரைப் போலவே சிவாஜி கணேசனையும் மறைந்த முதல்வர் கருணாநிதியின் எழுத்தில் உருவான பராசக்தி படத்தில் முதன்முதலில் சக்ஸஸ் என்கிற வசனத்தை பேசி அறிமுகமானார். பின்னர் மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர்,ஜெயலலிதா உள்ளிட்டோருடன் நடித்த சிவாஜி கணேசனுடன் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, விஜய் என்று இன்றைய நடிகர்கள் சிலரும் நடித்துள்ளனர்.  ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படம் சிவாஜி கணேசன் இறுதியாக நடித்த திரைப்படமாகும். 

 

இதனையொட்டி சென்னை அடையார் மியூசிக்கல் அகாடமியில் சிவாஜிக்கு மரியாதை செலுத்தும் விதமாக வழங்கப்படும் விருதுகளை நடிகர் சிவகுமார் வழங்குகிறார். மேலும் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன் மற்றும் நடிகர் பிரபு உள்ளிட்ட சிவாஜி குடும்பத்தினரும் மரியாதை செய்தனர்.

 

மறைந்த சிவாஜி கணேசனின் பெயரில் இந்திய நடிகர்களுக்கான புகழ்பெற்ற ’செவாலியர்’ விருதுகள் வழங்கப்படுவதும் சிவாஜி கணேசன் நடிகர் திலகம், பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

SIVAJIGANESAN, NADIGARTHILAGAM, PADMASHREESIVAJIGANESAN, PARASHAKTHIHERO

OTHER NEWS SHOTS