கலப்பு திருமணம் செய்த பெண்ணிற்கு அடி உதை:பெற்றோரும் பார்த்து ரசித்த கொடூரம்!

Home > தமிழ் news
By |

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் கலப்பு திருமணம் செய்ததால் இளம் பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம் நடந்துள்ளது.பஞ்சாயத்து தீர்ப்பின்படி அந்த பெண்ணிற்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.அதுவும்மகள் அடி வாங்குவதை  பெற்றோரும் பார்த்து ரசித்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ராஜூலி கிராமத்தைச் சேர்ந்த பெண்ணொருவர்  செப்டம்பர் 30 அன்று  ஊரை விட்டு ஓடிப்போய், வேறு சாதியைச் சேர்ந்த ஆண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். பின் இருவரும் பக்கத்தில் இருந்த வேறொரு கிராமத்தில் வசித்து வந்தனர். இவர்கள் இருக்கும் இடத்தைத் தேடி வந்த ஊர் பஞ்சாயத்துகாரர்கள், அந்தப் பெண்ணை அடித்து இழுத்துச் சென்றனர்.

 

அதன்பிறகு கிராம பஞ்சாயத்து கொடுத்த உத்தரவின் பேரில் 5 மணிநேரம் மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெண்ணின் தந்தை, தன்னுடைய விருப்பத்தை மீறி  சாதி மாறி மகள் செய்து கொண்ட திருமணத்தை தான் விரும்பவில்லை என்று கூறினார். மேலும், ஊர் பஞ்சாயத்து கொடுத்த தண்டனை சரிதான் என்று அதை ஆதரிக்கவும் செய்தார்.

CASTEISM, BIHAR, ELOPING OF INTER CASTE MARRIAGE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS