பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஐஸ்வர்யா வெளியேறுவார் என எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அதற்கு ஏற்றார் போல ஐஸ்வர்யாவும் விதவிதமாக தனது கோபத்தை வெளிப்படுத்தி, சக போட்டியாளர்கள் அனைவரையும் டார்ச்சர் செய்து வந்தார்.

 

இதில் உச்சகட்டமாக தனது உயிர்த்தோழியான யாஷிகாவிடமும் அவர் சண்டை போட்டிருந்தார். இதனால் பார்வையாளர்கள் ஐஸ்வர்யாவை கண்டிப்பாக வீட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.

 

இந்தநிலையில் சற்றும் எதிர்பாராதவிதமாக சென்றாயன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

 

இதனால் வழக்கம்போல ஐஸ்வர்யாவை பிக்பாஸ் காப்பாற்றி விட்டதாக, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS