வைல்டு கார்டு எண்ட்ரியில் உள்ளே வந்த விஜயலட்சுமி கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டார்.தொடர்ந்து ரசிகர்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் அவர் 2-வது இடத்தையும் பிடித்தார். இது தொடர்பான காட்சிகள் நேற்றிரவு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது.

 

இந்தநிலையில் விஜயலட்சுமியின் டிவிட்டர் பக்கத்தில் இருந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ''வாக்களித்து விஜயலட்சுமியை 2-வது இடம் பெறச்செய்த அனைவருக்கும் நன்றி.வரும் நாட்களில் புலி மேலும் முறத்தால் அடி வாங்கும் என  நம்புவோமாக,'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதில் மும்தாஜ் மற்றும் ஐஸ்வர்யாவின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதால் இவர்கள் இருவரையும் குறிப்பிட்டுள்ளதாக கருதப்படுகிறது.

 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS