பிக்பாஸ் வீட்டில் இன்று மும்தாஜுக்கு மோசமான நாள் போல, சக போட்டியாளர்கள் அனைவரும் மும்தாஜையே வறுத்தெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

 

காலையில் ரித்விகாவுக்காக என்னால் செய்ய முடியாது என மும்தாஜ் டாஸ்க் செய்ய மறுத்தார். தொடர்ந்து மும்தாஜ் அனைவரிடமும் அன்பு காட்டி ஏமாற்றுவதாக, சக போட்டியாளர்கள் ஆவேசப்பட்டனர்.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில், மும்தாஜிடம்-சென்றாயன் கோபப்படுவது போல காட்சிகள் உள்ளன. தொடர்ந்து மஹத் போல நானும் போகணுமா? என்றும் சென்றாயன் கேட்கிறார்.

 

இதனால் சமீபகாலமாக நண்பர்களாக பிக்பாஸ் வீட்டில் வலம்வந்த சென்றாயன்-மும்தாஜ் இருவரும், இனி மோதிக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS