இன்று காலை வெளியான ப்ரோமோ வீடியோவில், எனக்கு ஒரு கடமையும்-பொறுப்பும் உள்ளதாக நான் நினைக்கிறேன். அதனை செய்ய வேண்டியுள்ளது. கமல் என்ன செய்யப்போகிறார் என நீங்கள் வேடிக்கை பார்க்கிறீர்கள்.நீங்கள் வேடிக்கை பாருங்கள். நான் வேலையைப் பார்க்கிறேன்,'' என கமல் கோபத்துடன் தெரிவிப்பது போல காட்சிகள் இடம்பெற்றன.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான 2-வது ப்ரோமோ வீடியோவில் ஐஸ்வர்யா-சென்றாயன் இடையே மோதல் ஏற்படுகிறது, அதனைப்பார்க்கும் கமல் தான் அணிந்திருந்த கோட்டைக்கழற்றி கீழே போடுகிறார்.தொடர்ந்து தான் அணிந்திருக்கும் முழுக்கை சட்டையை ஏற்றிவிட்டு ஐஸ்வர்யாவை கோபத்துடன் அவர் எச்சரிப்பது போல காட்டப்படுகிறது.

 

சமீபத்திய பிக்பாஸ் டாஸ்க்கில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றன. இதனால் சனிக்கிழமையான இன்று கமல் என்ன செய்ய போகிறார்? என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த நிலையில், இந்த ப்ரோமோ வீடியோ மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS