'இது ஒண்ணும் ஆனந்தம் படம் கெடையாது'.. போட்டியாளர்களுக்கு ஆப்பு வைத்த பிக்பாஸ்!

முதல் ப்ரோமோ வீடியோவில் பாலாஜி டேனியிடம், ''ஒரு மஹத் வெளில போனான்னு நெனைக்காத. பதிலுக்கு 6 மஹத் உள்ள இருக்காங்க,'' என்று புறணி பேசுகிறார்.2-வது ப்ரோமோ வீடியோவில் பாலாஜி-சென்றாயன் இருவரும் சண்டை போடுவது போல காட்சிகள் இருந்தன.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான 3-வது ப்ரோமோ வீடியோவில் போட்டியாளர்கள் விதிமுறைகளை மீறியதால், பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் லக்சுரி பட்ஜெட் மொத்தமாக ரத்து செய்யப்பட்டதாக பிக்பாஸ் தெரிவிப்பது போல காட்சிகள் உள்ளன.

 

இது போட்டியாளர்களை பெரிதாக பாதிக்கும் என்பதால் இன்றிரவு விதிகளை மீறிய போட்டியாளர்களை, சக போட்டியாளர்கள் விமர்சனம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS