வாரம் முழுவதும் நடைபெற்ற டாஸ்க்குகளில் மஹத் தொடர்ந்து ஆவேசம் காட்டி வந்தார். இதனால் ரசிகர்கள் மிகுந்த கோபத்துடன் அவரின் செயல்பாடுகளை சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர்.

 

இதுதொடர்பாக இன்று வெளியான முதல்  ப்ரோமோ வீடியோவில் ரசிகர்கள் அவர்களைக் கேள்வி கேட்க வேண்டும் என கோபப்படுகின்றனர். பதிலுக்கு மெனு நீங்க கொடுத்தீட்டிங்கள்ல தாளிச்சிடலாம் என, கமல் கூறுவது போல காட்சிகள் இருந்தன.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் மும்தாஜ்-மஹத் இந்த இருவரில் யார் ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை என கமல் கேட்க, ரசிகர்கள் மஹத் என கத்துகின்றனர்.

 

இதைத்தொடர்ந்து மஹத்திடம் பேசும் கமல் நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் நாங்க சொல்லட்டுமா? என கோபப்படும் கமல், ஒரு குறும்படம் போடலாமா? என கேட்கிறார். ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றனர்.

 

இதனால் கண்டிப்பாக இன்றைய நிகழ்ச்சியில், மஹத்துக்கு ஒரு குறும்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS