முதல் ப்ரோமோவில் மஹத்-யாஷிகா தலைவர் பதவிக்கு போட்டியிடுவது போலவும்,2-வது ப்ரோமோவில் மஹத், மும்தாஜை தாக்கிப் பேசுவது போலவும் காட்சிகள் வெளியாகின.

 

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில்,சென்றாயன் ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் பேசுவது போல காட்சிகள் வெளியாகியுள்ளன. அவர் பேசும்போது, ''5000 ரூபாய் பணம் உள்ளது போல மும்தாஜ் மேடம் அந்த பேக்கை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்,'' என சென்றாயன் கலாய்க்கிறார்.

 

இதேபோல ரித்விகா பணம் இருக்கும் பையை அங்கே வைத்துவிட்டு இங்கே படுத்துக்கொண்டிருக்கிறார் என,ரித்விகாவை கலாய்க்கவும் அவர் தவறவில்லை. இதனால் இன்றைய இரவு பிக்பாஸ் நிகழ்ச்சி ஜாலியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS